அனுதினமும் அன்னையர் தினமே

Saraswathy & Nageshwar Rao
Saraswathy & Nageshwar Rao

தங்கை பிறக்கும் வரை தாய் பால் குடித்தேன்,
உந்தன் முகம் உரித்தே பிறந்தேன்,
உயிர் பிரியும் வலியை ஏற்று எனக்கு உயிர் குடுத்தாய்,
உனக்கு மட்டுமே தீர்க்க முடியா கடன் பட்டிருக்கேன்!
என்னுள் இருக்கும் கால்சியம் கிடங்கே நீதானே,
எலும்பை உருக்கி பாலாய் தந்த என் தாயே!
பிஞ்சி கன்றும் கன்னி தமிழில் சொல்லும் வார்த்தை அம்மா,
வஞ்சி என்னவளிடம் நான் தேடும் உறவும் அம்மா அம்மா!!
என் புத்தாடை அனைத்தும், நீ விட்டுக்குடுத்த புடவைகள்,
என் படிப்பு அனைத்தும், நீ நிலத்தில் விட்ட வியர்வைகள்.
என் பசிஆற்ற பத்துமோ பத்தாதோ என்று நீ பட்டினியாய் படுத்த நாட்கள் எத்தனையோ,
எனக்காய் வேண்டி உண்ணாநோன்பு இருந்த நாட்களும் அத்தனையே,
இறை நம்பிக்கை உண்டெனக்கு, உன்னை கடவுளாய் உணர்ந்த நாள் முதல்,
அன்பும் கருணையும் மட்டுமே கொண்ட அன்னையே,
நாள் ஒன்று போதுமோ உனை வணங்க??
அன்பு அம்மா உடைய எல்லா ஜீவராசிகளுக்கும்,
அனுதினமும் அன்னையர் தினமே

2 comments

  1. mind blowing!.. being a mom loving each and every bit of this…”அனுதினமும் அன்னையர் தினமே”, very true ..

    Suggestion: “எலும்பை உருக்கி பாலாய் தந்த என் தாயே!” , i felt it would be more apt if its”rathathai”

    Reply

  2. Excellent.. love this line a lot “இறை நம்பிக்கை உண்டெனக்கு, உன்னை கடவுளாய் உணர்ந்த நாள் முதல்,” ..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *