நீ பாரதி அல்ல.. பாரதத்தின் தீ

20131211-121204.jpg

 

குறிப்பு – இக்கவிதை என் படைப்பு அல்ல, எங்கோ படித்ததில் பிடித்தது

 

நீ பாரதி அல்ல.. பாரதத்தின் தீ..
ஆம்..
உன்னை சுமந்தவள் நெருப்பை
விழுங்கி இருக்கவேண்டும்..
அதனால் தான் அந்த சிவசக்திக்கு
நீ கட்டளையிட்டாய்..!

தமிழுக்கு பல முகம் உண்டு..
அவள் அக்னியானது உன் கையில்தான்..!
உன் விழியிலிருந்து பொங்கிய
கண்ணிற்கூட எரிமலையின் சீற்றமே..!

நீ காதல் கொண்டு எழுதிய
வார்த்தைகூட கனலில்
தகந்து அமுதம் ஊட்டின..

நீ தந்த வார்த்தைகள்
நெருப்பின் பிள்ளைகள்..

இதில் ஆச்சரியம் கொள்ள
எதுவும் இல்லை..
தீபத்தில் இருந்தாலும்
நெருப்பு சுடத்தான் செய்யும்..!

உன் உஷ்ணம் தங்காமல் தான்
பூமித்தாய் உன்னை விரைவில்
அழைத்துகொண்டாளோ..?

காட்டுத் தீயை ஆனைக்க
நெருப்பால்தான் முடியும்..
அதனால் தான் உன் சிதைக்கு
தீ மூடினார்கள்..

முடியாதது முயலாதது மட்டுமே…
ஆனால் முயன்றாலும் முடியாதது
பாரதி எனும் நெருப்பை அணைப்பது..

நெருப்பாய் பிறந்தாய்..
தமிழாய் வாழ்ந்தாய்..
சிறிது நேரம் கண் அயர்ந்தாய்..

போதும்..

எழுந்து வா…

புதிய பாரதம் படைப்போம்..
உன் கனவுகளுக்கு உயிர் கொடுப்போம்..

உனக்கு அழிவில்லை..
உலகுள்ளவரை நீ வாழ்வாய்..
நெருப்பாய்..!
தமிழாய்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *