How to write/comment/chat in Tamil – தமிழில் இணையத்தில் எழுத

Language is a powerful tool for communication and often its associated with Pride, culture, ethnicity and essentially who you are.

I always love to read, write and talk in Tamil/Tamizh ( My Native Language & One of the Worlds Oldest Language in existence) and easily thats my first love. Its natural that i think in the same language even when i write software programs and translate that to english. When i speak in english i am doing a real-time translation of what i am thinking in tamil.

Having traveled 8674 miles from Chennai to San Jose, i speak a lot of tamil daily but dont write that much in tamil ever since i started using keyboard to write instead of pens. So to quench my thirst to write tamil i was looking for ways to post in tamil easily without needing to transliterate somewhere else and paste it in another place.

If you are using Google Chrome as your default browser, you can install the Plugin Google Input Tools (by Google) and you can rock the web in your language.

More the you go local the more international you become.

Steps

  1. Install the Plugin by clicking the link Google Input Tools (by Google)
  2. Click on the Plugin Icon on the Right Side of your address bar and select Extension Options.
  3. Follow the Image.
Google Input Tools (by Google)
How to Use Google Input Tools plugin for Chrome

This is not the only way, there are many ways to do so. I found this the easiest and most intuitive way. I even chat in tamil in gmail. More ways to write in Tamil http://goo.gl/kgQW8

மொழி!! தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு அடிப்படை கருவி, அது எப்போதும் ஒருவரின் பெருமை, கலாசாரம், பண்பாடு, நாகரீகம்  இவற்றை அடையாளபடுத்தும்  விடயமாகவே இருந்துள்ளது. நாம் நாமாக இருக்க மொழியும் ஒரு காரணம்.

உலக செம்மொழியாம் தமிழில் எழுத, பேச, படிக்க எனக்கு அலாதி இன்பம். யாம் எம்மொழியில் பேசினாலும் தமிழில் யோசித்து மொழிபெயர்த்தே பேசுகிறோம்.

கடல் கடந்து வந்தாலும் நாள்தோறும் தமிழிலேயே பேசுகிறேன், அனால் பேனாவை விட்டு கணினியை தொட்ட நாள் முதலாய் எழுதுவது மட்டும் மிக குறைந்து விட்டது. தமிழில் அன்றாடம் எழுத ஆசைப்பட்டு அதற்கான வழிகளை தேடினேன்.

கிடைத்தது Google Input Tools (by Google)  சொருகி, நீங்கள் கூகுளின் க்ரோம் உலாவி பயன்படுத்துபவராயின் இந்த சொருகி பயன்படுத்தி எந்த இனைய தளத்திலும் தமிழில் எழுதலாம்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்

  1. Google Input Tools (by Google) இணைப்பை க்ளிக் செய்து, சொருகியை நிறுவவும்.
  2. உலாவியின் வலது ஓரத்தில் இருக்கும் சொருகியின் சிறிய படத்தை க்ளிக் செய்து, Extension Options க்ளிக் செய்யவும்.
  3. கீழே இணைத்துள்ள படத்தினை பின்தொடரவும்
Google Input Tools (by Google)
How to Use Google Input Tools plugin for Chrome

தமிழில் எழுத இது மட்டுமே வழி அல்ல, மேலும் பல வழிகள் உள்ளன. இவ்வழி மிக சுலபமான வழியாக தோன்றியதால் தமிழில் எழுத விழைவோருக்கு ஏதுவாக  இருக்கும் என்று பகிர்ந்துள்ளேன். மற்ற வழிகளை அறிய http://goo.gl/kgQW8 இணைப்பை படிக்கவும்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்றி தோன்றிய மூத்த குடியென்று மட்டும் திரியாதே
கல்போட்டு மண்போட்டு காலத்தின் பின் போட பகைமை துடிக்கிறது என்றும் மறக்காத – சுஜீத்

முடிந்தவரை தமிழை இணையத்தில் ஏற்றுவோம், தினந்தோறும் தமிழில் எழுத முயற்சிக்கவும்.

நன்றி !! வாழ்க தமிழ்.

 

3 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *